பொருள் : மதுரையில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு சம்பந்தமாக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் சம்பந்தமாக.



கலியுகாப்த 5124, ஸ்ரீ சுபகிருது
வைகாசி 22, ஜூன் 05, 2022, ஞாயிறு
பொருள் : மதுரையில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு சம்பந்தமாக எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் சம்பந்தமாக.
விஷ்வ ஹிந்து பரிஷத் பேரியக்கத்தை வழிகாட்டுவதற்காக துறவியர் பெருமக்கள் தலைமையில் 'மார்க தர்ஷக் மண்டல்' (அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை) தொடர்ந்து ஆன்மிக தேச பணிகளை செய்து வழிகாட்டி வருகிறது.
அந்த வகையில் துறவியர் பெருமக்கள் ஆதீனங்கள் மடங்கள் ஆன்மீக பெரியோர்கள் ஒன்றிணைந்து ஹிந்து சமுதாயத்தின் தற்போதைய சூழ்நிலை அபாயத்தை புரிந்துகொண்டு துறவியர் பெருமக்கள் மாநாடுகள் நடத்துவது வழக்கம்.
இந்த வருடம் தமிழகத்தில் ஆன்மீக நகரமான மதுரை பரவை ஆகாஷ் கிளப்பில் ஜூன் 4 & 5 துறவியர்கள் மாநாடு நடைபெற்றது, இதில் நூற்றுக்கும் மேற்பட்ட துறவியர் பெருமக்கள் கலந்துகொண்டனர்,ஜூன் 4 ல் விசேஷ ஹோமங்கள், கோபூஜை, பாத பூஜைகளும், மாநாடு கொடியேற்றம் என்று துவங்கி மதுரை ராமகிருஷ்ண மடம் ஸ்ரீ கமலாத்மா நந்தா சுவாமிகள் ஆசி உரையுடன் மதுரை ஆதீனம் ஸ்ரீ குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் துறவியர் மாநாடு நடைபெற்றது.இதில் திருப் பேரூர் ஆதீனம் ஸ்ரீ சீர் வளர் சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,மற்றும் கௌமார மடாலயம் சீரவை ஆதீனம் சீர்வளர்சீர் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர்களும்,ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் ஆதீனங்கள் மடங்கள் ஆன்மீக பெரியோர்கள் நூற்றுக்கணக்கான துறவி மக்களுடன் பங்கேற்று சிறப்பித்தனர்,
இதில் முக்கிய தீர்மானங்கள் துறவியர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு ஹிந்து சமுதாயத்தின் வலிமைக்கும், தடங்கலாக உள்ள விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு மதமாற்றம் தற்போதைய கோவில்களின் நிலைகள் பற்றியும் ஹிந்துக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை கையாளுவது சம்பந்தமாகவும் அதற்கான நிரந்தர தீர்வு பற்றியும் விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் துறவியர் பெருமக்கள் முழு ஆசியுடன் நிறைவேற்றப்பட்டது.
ஹிந்து சமுதாயம் சமகாலத்தில் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகளான மதமாற்றம் இந்துக்களின் கல்வி முறைகள் கோவில்களைப் பாதுகாத்தல் போன்ற எதிர்கால திட்டங்களும் அவற்றிற்கான வழிமுறைகளும் பற்றியும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதை ஹிந்து மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் விதமாகவும் துறவியர் பெருமக்கள் கொண்டுவந்த தீர்மானங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் மதுரையில் ஜூன் 5 அன்று பழங்காநத்தம் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று மக்களை திரட்டி துறவியர் பெருமக்கள் தலைமையில் நடைபெற்றது, துறவியர் பெருமக்கள் விவாதித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பற்றி விளக்க உரையும் அதை சரிசெய்வதற்கான ஹிந்து மக்களின் ஒற்றுமையையும் முன்னிறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
எனவே இந்து சனாதன தர்மத்தின் பண்பாட்டை பாதுகாக்கவும் அதன் உயரிய உண்மையான வரலாறை போற்றி வணங்கவும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆன்மீக துறவியர் பெருமக்கள் முயற்சி தொடர்ந்து நடைபெறும்.
இதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான இந்துக்கள் மதுரை பழங்காநத்தம் பகுதிகளில் ஒன்றுகூடி மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்த உறுதிமொழி ஏற்றனர் இப்போது கூட்டத்தில் மதுரை ஆதீனம் ஸ்ரீ குருமகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆதீனம், ஸ்ரீ சீர் வளர் சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச் செயலாளர் திரு. மிலிந்த் பராண்டே அவர்கள் அவர்களும் கலந்துகொண்டு எழுச்சி உரை ஆற்றினர். பேஜாவர் பீடாதிபதி ஸ்ரீமத் பிரச்ன்ன தீர்த்த சுவாமிகள் , உடுப்பி, ராம்ஜன்ம பூமி க்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர் ஆசி வழங்கினார்.
இணைப்பு: 1)தீர்மான நகல்
2) துறவியர் மாநாடு அழைப்பிதழ்